9,990 ரூபாய்க்குக் கணினி?

நேற்றிரவு சன் டிவி செய்திகள் பார்த்த போது ஒரு தகவல் மிக மகிழ்ச்சியை அளித்தது. 9990 ரூயாய்க்கான கணினியை அமைச்சர் தயாநிதி மாறன் நாட்டுக்கு அர்ப்பணித்த அந்தச் செய்தி எனக்கு சில மாதங்களுக்கு முன் அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டியது.

கணிப்பொறிகள் அனைவரும் வாங்கும் விலைகளுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த விலையில் கணினி உருவாக்கப்படும்; ஜூன் மாதத்தில் 10000 ரூபாய் விலையில் கணினி விற்பனைக்கு வரும் என்று அறிவித்திருந்தார் அவர்.

ஜூனில் இல்லாவிட்டாலும் ஆகஸ்டிலாவது பத்தாயிரம் ரூபாய்க்குப் பத்துரூபாய் குறைவாகவே கணினி விற்பனைக்கு வந்தது சந்தோஷமான விஷயம்தானே?

VIA சிப்செட் மைக்ரோபிராசசர், சீகேட்டின் ஹார்ட் டிஸ்க் மற்றும் டிவிஎஸ் எலக்ட்ரானிக்சின் பாகங்களுடன் HCL நிறுவனம் இந்தக் கணினியைத் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. வேறு நிறுவனங்களும் இதுபோன்ற கணினியைத் தயாரிக்க முன் வந்தால் இன்னும் கூட விலை குறையும் என்று வெளியீட்டு விழாவில் அமைச்சர் கூறினார்.

14,000 ரூபாய் விலையில் விற்கப்பட்ட இந்தக் கணினி இப்போது 9,990 ரூபாய்க்குத் தரப்பட இருப்பதாக HCL நிறுவனத் தலைமை அதிகாரி இதே விழாவில் கூறியிருக்கிறார்.

ஏமாற்றம்-1

இன்றைய செய்தித்தாள்களில் இந்தக்கணினிக்கான விளம்பரங்களை HCL நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 1Ghz/Linux தவிர மற்றபடி எல்லா பிசிக்களின் சராசரியான 128MB RAM/40GB HDD/52X CD ROM/1.44MB FDD/15'' MONITOR/INTERNET KEYBOARD/ MOUSE எல்லாம் இருக்கிறது.

ஆனால் அந்த விளம்பரத்தில் காணும் சிக்கல்கள் இவை:

a fully functional HCL PC at Rs.9,990 only
என்ற முகப்பு விளம்பரத்தில் ஒரு நட்சத்திரக் குறியிட்டு அதன் விளக்கம் சிறிய எழுத்தில் கீழே:

சிக்கல்-1
(*) Conditions apply. Rs.1,250/- additional for delivery, installation & after sales service for 1 year.
(9,990+1,250 = Rs.11,240 [?])

சிக்கல்-2
LST/VST and other levies/taxes extra as applicable.
(அப்படியானால் 11,240+வரிகள் தனி?)

சிக்கல்-3
Accessories shown here may not be the part of standard configuration.
(அமைச்சர் வெளியிட்டது விளம்பரத்தில் உள்ளபபடியான கணினி தான். அப்படியிருக்க இந்தக்குறிப்பின் அவசியம் என்ன? உபயோகிப்பாளர்களுக்கு இவர்கள் தரப்போவது வேறா?)

(யார்) யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்?
10,000 ரூபாய்க்குள் கணினி என்பது உண்மையானால் அனைத்தும் அடங்கிய MRP 10,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டாமோ?

ஏமாற்றம்-2

அமைச்சரால் உலகிலேயே முதன்முறையாக வெளியிடப்பட்ட 9.990 ரூபாய் கணினிக்கு முன்னதாகவே கல்கத்தாவைச் சேர்ந்த Xenitis Infotech நிறுவனம் 'Apna PC' என்ற பெயரில் அதே 9,990 ரூபாய்க்கு கணினியை விற்பனைக்கு விடுத்துள்ள விபரம் அமைச்சருக்கு தெரியுமா?

10 comments:

 1. சுதர்சன் says

  மேலும், Xenitis வெளியிட்டுள்ள கணிணி இன்டெல் ப்ராஸசர் மற்றும் இன்டெல் சிப்செட் கொண்டது போலும்.
  ரீடிஃப் சுட்டி


  rajkumar says

  இது வெறூம் விளம்பர உத்திதான். அமைச்சரை மகிழ்விப்பதற்காக ஹெச்.சி. எல். நிறுவனம் எடுத்த நடவடிக்கை.

  யார் இதைப் பற்றி ஆராயப்போகிறார்கள்,. வேண்டிய பப்ளிசிட்டி ஹெச்.சி.எல்லிற்கு கிடைத்து விட்டது.

  ராஜ்குமார்


  newsintamil says

  நன்றி சுதர்சன், ராஜ்குமார்

  எனக்குக் கிடைத்த தகவல்களில் Xenitis கணினியும் 9,990 ரூபாய் என்றிருந்தது. சுதர்சன் நீங்கள் கொடுத்த சுட்டியில் 9,790 ?

  infotech.indiatimes.com

  business-standard.com


  test says

  அமைச்சர் தயாநிதி தாத்தாவைவிட நல்ல அரசியல்வாதி.
  படித்தவர்களே ஆனாலும் உண்மையான தொண்டு நோக்கம் இல்லாதவர்களால் ஒரு பிரயோசனமும் கிடையாது.
  அதிகாரிக்கும் மக்கள் பிரதிநிதிக்கும் ( M.P / M.L.A ..etc) உள்ள முக்கிய வித்தியாசம்:
  பிரதிநிதி, மக்களுக்கு இதனால் கிடைப்பது என்ன என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

  அரசு நினைத்தால் இதைவிட குறைந்த விலைக்கு கொடுக்க மு டி யு ம்.

  அன்புடன்,
  கணேசன்.


  சுதர்சன் says

  நீங்கள் சுட்டியிள்ளது பழைய செய்தி, மார்ச்சில் வந்தது. அப்போது அந்த <10K Xenitis கணிணிகள் Cyrix ப்ராஸசருடன் வரும் என்று சொல்லப்பட்டது, ஆனால் இப்போது HCL-இன் அறிவிப்பு வந்தவுடன் ப்ராஸசர் இன்டெல் என்று புதிய செய்தி வந்திருக்கிறது. Xenitis தளம் இது பற்றி எல்லாம் ஒன்றும் கூறவில்லை, 12,990/- ரூபாய்க்கு கணிணி என்ற அறிவிப்போடு அமைதியாய் இருக்கிறது. ரீடிஃப் இந்த செய்தியை எங்கே பிடித்தார்கள் என்று தெரியவில்லை.


  சுதர்சன் says

  //அரசு நினைத்தால் இதைவிட குறைந்த விலைக்கு கொடுக்க மு டி யு ம்.
  //

  அரசு இன்னும் என்ன நினைக்க வேண்டும்? தேவை இருந்தால் தானே விலை குறையும். கணிணியின் பெரும்பாலான பாகங்கள் சீனா, தைவான், கொரியா போன்ற நாடுகளில் இருந்துதான் வருகின்றன. இவற்றிற்கான இறக்குமதி வரிகளை பெருமளவு குறைத்தாயிற்று. கணிணிகளை அசெம்பிள் செய்யும் HCL,விப்ரோ போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கும் வரிவிலக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. வாங்குவோருக்கு மானியம் அளிக்காதது ஒன்றுதான் குறை.


  newsintamil says

  Xenitis கணினி பற்றி செய்தி நிறுவனங்கள் ஒவ்வொரு விதமாகச் செய்தி வெளியிட்டுள்ளதால் அந்தத் தகவலின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகிறது.

  அதே சமயம் HCL 10,000 ரூபாய்க்குள் கணினி என்று அறிவித்து விட்டு வரிகளையும் பாக்கிங் செலவுகளையும் தனியாக வசூலிப்பது ஏமாற்று வேலைதான்.

  எப்படியும் பத்தாயிரம் ரூபாயை மட்டும் மடியில் கட்டிக் கொண்டு கணினி வாங்கிவிட முடியாது என்பதே தீர்மானமான உண்மை.

  'மந்திரி பாட்டுக்கு அறிவித்து விட்டார். நாங்கள் என்ன செய்வதாம்' என்று நிறுவனங்கள் இம்மாதிரி தகிடுதத்தங்கள் செய்வதாகத் தோன்றுகிறது.


  test says

  //வாங்குவோருக்கு மானியம் அளிக்காதது ஒன்றுதான் குறை//
  கொடுத்தால் என்ன குறைந்து போயிற்று?
  கணனி காலத்தின் கட்டாயமாக மாறி வரும் வேளையில் குறைந்த பட்சம் இணைய வசதிக்காகவாது நூலகங்களிலும், பள்ளிகளிலும் அரசாங்கம்
  கணனி வைத்திக் கொடுக்கலாம்.

  எத்தனை கிராமப்புற நூலகங்கள் கணனி வைத்துள்ளன?
  எத்தனை பள்ளிகளில் கணனி வசதி உள்ளது?

  பயன்பாடு கீழ்மட்டம் வரை போய்ச் சேர்ந்தல்தான் தேவை கீழ்மட்டத்தில் இருந்து புறப்படும். அப்போதுதான் வாங்கும் தேவை பெருகும்.

  பயன்பாட்டை கீழ்மட்டம் வரைப் போய்ச் சேர்ப்பது அரசின் கடமை.

  எல்லாவற்றையும் அரசிடம் எதிர் பாருங்கள் என்று சொல்லவில்லை.

  பஞ்சாயத்துக்கு ஒன்றாக கலர் T.V கொடுத்து ஓட்டுவாங்கத் தெரிந்த...
  அதன் மூலம் T.V யை ஒரு முக்கியப் பயன் பாடாக மாற்றி இன்று T.V இல்லாத வீடுகளே இல்லை என்று மாற்றிய "அரசு"
  கல்விப் பயன் பாட்டிற்காக ஒரு முயற்சி செய்தால் என்ன குறைந்தாவிடும்?


  Anonymous says

  enakkum intha santthaham irunthathu


  Anonymous says

  Mydear friend,
  You are too innocent.
  Our PC manufacturers are too intelligent.
  Assembly election is round the corner.
  It is time to con and corner the gullible voters.
  Politics is lurking behind every statement of every day of every leader.
  Take solace in Valluvar. "Epporul..."
  Anbudan
  Paamaran