தமிழ்மணம்

வலைப் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் வணக்கம். மாற்றியமைக்கப் பட்ட வடிவத்தில் இந்த வலைப்பதிவிற்கு தமிழ் மணம் திரட்டி குறித்த சில விமர்சனங்களுடன் இன்று மீண்டும் வந்திருக்கிறேன்...

தமிழ்மணம்- காசி அவர்களால் தமிழ் வலைப்பதிவுலகிற்கு வழங்கப்பட்ட அருங்கொடை. பதிவுகளை திரட்டித்தர உருவான தமிழ்மணம் இன்று தொடர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சியும் கண்டிருக்கிறது. இதில் நான் கண்ட சில ஐயப்பாடுகள் குறித்து....

1. மன்றம் மிக பயனுள்ள பிரிவு. ஆனால் அதன் அமைப்பு தெளிவாக இல்லாதது போல எனக்குப் படுகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் ஏராளமான சுட்டிகள் இருப்பது போன்ற தோற்றம். உள் நுழைவும் எளிமைப் படுத்தப் பட வேண்டும். எனக்கு மன்றத்தின் பக்கங்கள் திறக்க நிறைய நேரம் ஆகிறது. மறுமொழி/கருத்தை இட சிரமம் உள்ளதாகத் தோன்றுகிறது. புதிய கருத்துக்களை வாசிப்பதிலும் நிறைவு தோன்றவில்லை.

2..தமிழ்மணத்தின் ஆரம்பத்தில் "வலைப்பதிவுகள் இயங்கு எழுத்துரு பயன்படுத்துகின்றனவா? யூனிகோடில் அமைந்திருக்கிறதா? மோசில்லா போன்ற உலவிகளுக்கு தக்கவாறு justify போன்ற நிரல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதா?" என்பதையெல்லாம் சோதித்து பட்டியலிட்டு அறிவித்துக் கொண்டிருந்தது. பிறகு அந்தப் பக்கத்தைக் காணவில்லை. நாங்கள் பயன்படுத்தும் இயங்கு எழுத்துரு/நிரல்கள் சரியாக இயங்குகிறதா என்று சோதித்தறிய ஏதாவது வழியுண்டா?

3...வாசகர் பக்கத்தில் தேடல் சுட்டியை உரைச்சுட்டியாக மாற்றித் தரலாம். உ-ம்... "பதிவுகளில் தேட"

பொதுவான கணினி தொடர்பான ஒரு சந்தேகம்!

லினக்ஸ் இயங்குதளத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி இயங்குமா? அவ்வாறு பயன்படுத்துவோர் இருக்கிறார்களா?

4 comments:

 1. Anonymous says

  உங்கள் பக்கம் இயங்கு எழுத்துருவில் இயங்கவில்லை.காரணம் body என்பதற்க்கன எழுத்துருவில் தமிழ் எழுத்துருவிற்கு முதல் நிற்பது Trebuchet MS", ...Latha, TheneeUniTx, என்னும் ஒரு எழுத்துரு.அதை (Trebuchet MS)எடுத்துவிடுங்கள்.வேலை செய்யும்.


  Anonymous says

  -suratha-


  Anonymous says

  லினக்ஸ் இயக்குதளத்தில் இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் கிடையாது. ஆனால் அந்த தண்டம் எதுக்கு? :-) அதான் ஃபயர்ஃபாக்ஸ் என்னும் அற்புதமான உலாவி இருக்கிறதே? லினக்ஸ், மைக்ரோசாஃப்டின் பல்வேறு இயக்குதளங்கள், மேகின்டாஷ் என்று எதையெடுத்தாலும் அதில் ஃபயர்ஃபாக்ஸ் வேலை செய்கிறது.


  Anonymous says

  மறுமொழி வழங்கிய நண்பர்களுக்கு நன்றி.மறுமொழிந்தவர்களின் பெயர்கள் மறுமொழிப்பெட்டியின் தவறால் விடுபட்டுள்ளதாக அனுமானிக்கிறேன்.
  சோதனை முயற்சியாக இதை வைத்தேன்.
  என்ன பிழை என்று புரியவில்லை.

  லினக்சில் இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் இல்லை என்பதை அறிவேன். ஆனால் .EOT இயங்கு எழுத்துரு ஃபயர்ஃபாக்ஸ்ஸில் வேலை செய்யாது என்பதால் தனியாக இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியை லினக்சில் நிறுவிக் கொள்ள முடியுமா? என்பதே எனது சந்தேகம். (pc magazine-களுடன் இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் கிடைக்கிறது.)  கூறுவது..: anurag