காட்சி தொடர்கிறது...

முதல் காட்சிக்குத் திரையை தூக்கிவிட்டு நான் பாட்டுக்கு மேடையை விட்டு இறங்கிப் போய் விட்டேன். அப்புறம் இன்றைக்குத் தான் மறுபடி மேடைப்பக்கம் வர முடிந்தது. வேறொன்றுமில்லை என் கணினிக்கு திடீரென்று இதயத்துடிப்பு நின்று போனதால் மாற்று இதயம் பொருத்த இத்தனை நாளாகி விட்டது. எல்லோருமாக முதல் காட்சியை நன்றாக நடத்தி வைத்திருக்கிறீர்கள். சிறப்பாக கற்பனைச் சிறகு விரித்த அனானிமஸ் யார்?

இரண்டாவது காட்சி

சமீப காலமாக தமிழ் பத்திரிகைகளுக்கும் பிற ஊடகங்களுக்கும் பரபரப்புச் செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை. செய்திகளை முந்தித் தருவதான போட்டியில் , அதீதமான புனைவுகளை உருவாக்கும் விதத்தில் தமிழ்ப் புலனாய்வு இதழ்களின் சமீபத்திய முரண்பாடுகளை புட்டு வையுங்க.

3 comments:

 1. காசி (Kasi) says

  மத்ததெல்லாம் அப்புறம்... முதலில் இந்த வண்ணத்தை மாத்துங்க, கண் கெட்டுப்போகும் போல இருக்கு.


  வலைஞன் says

  மாத்திட்டேன். இதுவும் சரியில்லைன்னா நீங்களே ஒரு வண்ணம் சொல்லிடுங்க...வெள்ளை தவிர.


  வலைஞன் says

  இன்றைக்கு தள தோற்றத்தையே மாற்றி விட்டேன்.