முதல் காட்சி

இரண்டாவது பதிவில் பின்னூட்ட மடல்களைக் காணவில்லை. அரங்கம் ஆரம்பமாக காத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரி ஆரம்பிப்போம்.

முதல் காட்சி

மாலன் கூறியிருப்பது போல வலைப்பதிவுகளின் புதிய சாத்தியக்கூறுகள் எதிர்காலத்தில் எப்படியெல்லாம் இருக்கக் கூடும்? கற்பனைக் குதிரையை வேகமாகத் தட்டிவிடுங்களேன்.

4 comments:

  1. Anonymous says

    இன்னும் சில காலங்களில், எழுத்து என்பது இப்படித்தான் என்பது மாறி, தமிங்கிலமும், வட்டார வழக்கு நடையும் வேகமாகும்..... ஏதாவது எழுதுவது என்ற நிலைக்கு மாறும். மடலாடற்குழுக்கள் இலக்கியம் பேசுபவர்களின் வலைப்பதிவு எண்ணிக்கை குறைந்து போகும்.

    யாராலும் எதுவும் கட்டுப்படுத்தப்பட முடியாத நிலை உருவாகும்...ஆளாளுக்கு, டைரி குறிப்புகளிலிருந்து எது வேண்டுமானாலும் எழுதுவார்கள்.. இதைத்தான் எழுதவேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் போகும். பக்குவமில்லாதவர்களின் எழுத்துக்கள் பதறிப்போக வைக்கும். அப்பொழுது, உபயோகமாக எழுதும் வலைப்பதிவுகளையும், மற்ற பதிவுகளையும் பிரிக்க நேரிடலாம்.
    (இதை தவிர்க்க, இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பவர்கள், சரியான வழிகாட்டியாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது! விவாதம் என்ற பெயரில் அடுத்தவரை வம்புக்கிழுப்பது போன்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் நிலை மாற வேண்டும். மாற்று கருத்து இருந்தாலும், தனியாக இழுத்து வந்து பதிவிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.)

    தமிழ்மணத்தின் பயன்பாட்டினை மனதில் கொண்டு, விளம்பர வலைப்பதிவுகள் உருவாகும்... ! (காசி, உங்ககிட்டத்தான் எல்லாம் இருக்கு..)

    ஏன் இன்னும் பல தமிழ்மணம் போன்ற திரட்டிகள் உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!

    வெகுஜன பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பும் தமிழ் வலைப்பதிவுகள் நோக்கிவரும்!

    இப்போதைக்கு சிறு குழுவாக இயங்கி வரும் வலைப்பதிவர்கள் புதியவர்களின் வரவினால் சிதறிப்போவார்கள் (அதற்கு முன், ஒரு வலைப்பதிவர் மாநாடு நடத்திடுங்கப்பா..)

    ஒளிந்திருக்கும் திறமைகள் வெளியாகும். பல வலைப்பத்திரிக்கைகள் உருவாகும். இதைகத்துக்க வாங்க, அதை கத்துக்க வாங்க, சமையல் குறிப்புகள், தனிமனித முயற்சியில் உருவாகும் உலக இலக்கியங்களின் மொழி பெயர்ப்புகள் இப்படி நினைத்ததை நினைத்த போது எழுத ஆரம்பிப்பார்கள். பின்னூட்டம் முக்கியமில்லை.. என் பணி இப்படி எழுதி வைப்பதுதான் என்ற எண்ணத்துடன் நிலையாக செயல் நடக்க ஆரம்பிக்கும். கவிதைகள் என்ற பேரில், ஏகப்பட்ட அகவிதை எழுதப்படும். படிப்பவர்கள் அதை விலக்குவார்கள். அந்த கவிஞர்கள் சிதறுவார்கள். கவிதையை தவிர்த்து உரைநடைக்கு தாவுவார்கள். (மடலாடற்குழுக்கள் கவிதைக்கு உறைவிடமாகும்) உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அந்தந்த நிமிடத்து செய்திகள் பதிவாகும். அச்சு ஊடகங்கள் இந்த செய்திகளினை ஆதாரமாகக் காட்டும்.

    ஏதாவது ஒரு டி.வி-யில் காலை நிகழ்ச்சிகளுடன், "வலைப்பதிவுகளில் இன்று" என்று ஓரிரு நிமிடங்களுக்கு அன்றையதினம் சிறப்பாக பதிவு பகிர்ந்தவர் பற்றி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


    தொழில்நுட்பம் சார்ந்து, ஏகப்பட்ட முன்னேற்றங்கள் வரும்...

    வாசகர் எண்ணிக்கை எகிரும். தமிழ்நாட்டிலிருந்து எழுதும் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை உயருமா என்பது சந்தேகம். ஆனால், தமிழ்நாடு தாண்டிய மற்ற பகுதிகளிலிருந்து, உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழர்களிடமிருந்து வேகமாக வலைப்பதிவுகள் உருவாகும்.(முக்கியமாக இலவச இணையத்தொடர்புள்ளவர்கள்)

    இன்னமும் சொல்ல மற்ற நண்பர்கள் வருவார்கள்...


    Kasi Arumugam says

    //யாராலும் எதுவும் கட்டுப்படுத்தப்பட முடியாத நிலை உருவாகும்...ஆளாளுக்கு, டைரி குறிப்புகளிலிருந்து எது வேண்டுமானாலும் எழுதுவார்கள்.. இதைத்தான் எழுதவேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் போகும். பக்குவமில்லாதவர்களின் எழுத்துக்கள் பதறிப்போக வைக்கும். அப்பொழுது, உபயோகமாக எழுதும் வலைப்பதிவுகளையும், மற்ற பதிவுகளையும் பிரிக்க நேரிடலாம்.//

    அய்யோ சொன்னவாய்க்கு சர்க்கரைதான் போங்க! இன்னிக்குக் காலையிலேயே ஒருததர் நவீன சரோஜாதேவியா மாறி ஒரு வலைப்பதிவை பட்டியலில் சேர்த்தார். சட்டுன்னு பிடிச்சு வெளியே தள்ளி கதவைச் சாத்திவிட்டேன். இனி தானா பட்டியலில் சேருவதை நிறுத்தி வைத்திருக்கிறேன். ஒரு பார்வை பாத்துவிட்டுத்தான் சேர்க்கணும். (யார் என்ன எழுதலாம்/எழுதக்கூடாதுன்னெல்லாம் நான் சொல்ல முடியாது, எது தமிழ்மணம் பட்டியலில் இருக்கலாம்னு, நான் முடிவு செய்யலாமே)

    //இதை தவிர்க்க, இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பவர்கள், சரியான வழிகாட்டியாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது! விவாதம் என்ற பெயரில் அடுத்தவரை வம்புக்கிழுப்பது போன்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் நிலை மாற வேண்டும். மாற்று கருத்து இருந்தாலும், தனியாக இழுத்து வந்து பதிவிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.//

    ஆமாம், என் கருத்தும் இதுவே.

    //தமிழ்மணத்தின் பயன்பாட்டினை மனதில் கொண்டு, விளம்பர வலைப்பதிவுகள் உருவாகும்... ! (காசி, உங்ககிட்டத்தான் எல்லாம் இருக்கு..)//
    கேக்க ஜாலியா இருக்கு. நடக்கட்டும்!

    //ஏன் இன்னும் பல தமிழ்மணம் போன்ற திரட்டிகள் உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!//
    கட்டாயம் நடக்கும். நடக்கணும். அப்போது, துறை/சுவை/கொள்கை நோக்கி இயங்கும் என்று ஒரு ஹேஷ்யம்.

    //வெகுஜன பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பும் தமிழ் வலைப்பதிவுகள் நோக்கிவரும்!//
    தெரியலை.

    //இப்போதைக்கு சிறு குழுவாக இயங்கி வரும் வலைப்பதிவர்கள் புதியவர்களின் வரவினால் சிதறிப்போவார்கள் (அதற்கு முன், ஒரு வலைப்பதிவர் மாநாடு நடத்திடுங்கப்பா..)//

    ஆமாம், நடக்கும்.

    //ஒளிந்திருக்கும் திறமைகள் வெளியாகும். பல வலைப்பத்திரிக்கைகள் உருவாகும். இதைகத்துக்க வாங்க, அதை கத்துக்க வாங்க, சமையல் குறிப்புகள், தனிமனித முயற்சியில் உருவாகும் உலக இலக்கியங்களின் மொழி பெயர்ப்புகள் இப்படி நினைத்ததை நினைத்த போது எழுத ஆரம்பிப்பார்கள். பின்னூட்டம் முக்கியமில்லை.. என் பணி இப்படி எழுதி வைப்பதுதான் என்ற எண்ணத்துடன் நிலையாக செயல் நடக்க ஆரம்பிக்கும். கவிதைகள் என்ற பேரில், ஏகப்பட்ட அகவிதை எழுதப்படும். படிப்பவர்கள் அதை விலக்குவார்கள். அந்த கவிஞர்கள் சிதறுவார்கள். கவிதையை தவிர்த்து உரைநடைக்கு தாவுவார்கள். (மடலாடற்குழுக்கள் கவிதைக்கு உறைவிடமாகும்) உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அந்தந்த நிமிடத்து செய்திகள் பதிவாகும். அச்சு ஊடகங்கள் இந்த செய்திகளினை ஆதாரமாகக் காட்டும்.//

    சாத்தியங்கள் (மட்டும்)

    //ஏதாவது ஒரு டி.வி-யில் காலை நிகழ்ச்சிகளுடன், "வலைப்பதிவுகளில் இன்று" என்று ஓரிரு நிமிடங்களுக்கு அன்றையதினம் சிறப்பாக பதிவு பகிர்ந்தவர் பற்றி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.//
    ஆஹா.. நடக்கட்டும், நல்லதுதானே.


    //தொழில்நுட்பம் சார்ந்து, ஏகப்பட்ட முன்னேற்றங்கள் வரும்...

    வாசகர் எண்ணிக்கை எகிரும். தமிழ்நாட்டிலிருந்து எழுதும் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை உயருமா என்பது சந்தேகம். ஆனால், தமிழ்நாடு தாண்டிய மற்ற பகுதிகளிலிருந்து, உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழர்களிடமிருந்து வேகமாக வலைப்பதிவுகள் உருவாகும்.(முக்கியமாக இலவச இணையத்தொடர்புள்ளவர்கள்)

    இன்னமும் சொல்ல மற்ற நண்பர்கள் வருவார்கள்...//

    வரட்டும். இதைச்சொன்னவர் யாருன்னே தெரியலையே? வெங்கட்டா?


    Jayaprakash Sampath says

    என் கணிப்பு

    வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால், ஆரம்பித்த ஜோரில், ஒன்று இரண்டு போஸ்ட் செய்துவிட்டு, தலைமறைவாகிவிடுவார்கள். அப்போது, தமிழ் மணம் போன்ற திரட்டிகள் வலைப்பதிவுகள் ரேட்டிங் போடலாம். ரேட்டிங்கில் இடம் கிடைக்காதவர்கள், தமிழ்மணம் போல புதிய திரட்டிகளைச் செய்ய முற்படுவார்கள். வலைப்பதிகளைத் துவக்கும் போதே, என்ன genre என்பதையும் குறிப்பிட வசதி ஏற்படும். இலக்கியம்/கலை/சமூகம்/அறிவியல் என்று niche blog aggregators வரும். இப்போது, கோஷ்டியாக செயப்லடுகின்ற வலைப்பதிவாளர்கள், அனைவரும் சிதறிப்போவார்கள். உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, வலைப்பதிவுகளில் சொந்தக் கதை, சோகக்கதைகள் அதிகமாகும். அழகியல் விஷயங்கள் பின்னுக்குப் போய், தகவல் சார்ந்த விஷயங்கள், சூடான செய்திகள், விவாதங்கள் தான் முக்கிய விஷயங்களாக இருக்கும். கதை, கவிதை, போன்ற இலக்கிய வஸ்த்துக்களுக்கு, வலைப்பதிவில் அதிக வரவேற்பு இருக்காது. வலைப்பதிவுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியவாதிகளும், உட்-பீ இலக்கியவாதிகளும், இதிலிருந்து கழட்டிக் கொள்ளுவார்கள். அப்படியே இலக்கியம் இருந்தாலும், இலக்கிய சர்ச்சைகளும், குடுமிபிடி சண்டைகளும் மட்டுமே நடைபெறும். வலைப்பதிகளின் pioneers எல்லாம், ஹ¥ம்ம் நாங்கல்லாம் அந்தக் காலத்துலே ... என்று நாஸ்டால்ஜியா பயணம் போவார்கள். கையெழுத்துப் பத்திரிக்கைகளாக இருந்த வலைப்பதிவுகள் எல்லாம் தினமலர் குமுதம் ரேஞ்சுக்குப் போய் விட்டது என்று 2009 இலே, சுஜாதா 'கற்றதும் பெற்றதும்' (பாகம் எட்டு) கட்டுரையில் எழுதுவார்.


    Jayaprakash Sampath says

    //அய்யோ சொன்னவாய்க்கு சர்க்கரைதான் போங்க! இன்னிக்குக் காலையிலேயே ஒருததர் நவீன சரோஜாதேவியா மாறி ஒரு வலைப்பதிவை பட்டியலில் சேர்த்தார். சட்டுன்னு பிடிச்சு வெளியே தள்ளி கதவைச் சாத்திவிட்டேன். //

    காசி : வெளிய தள்ளுவானேன்.... என் மெயில் பொட்டி பக்கம் தள்ளி உடறது :-)