அரங்க வாசல்

நன்றி நண்பர்களே!
முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் துணிவை உங்கள் பின்னூட்டமடல்கள் தருகின்றன. தொழில்நுட்ப ரீதியாகவும் நிச்சயம் உங்கள் ஒத்துழைப்புகள் தேவைப்படுகின்றன. ரமணி,மீனாக்ஸ்,பத்ரி கூறியுள்ள நுட்பங்கள் படிப்படியாக செய்வோம். அவ்வப்போது ஆலோசனைகள் தந்து கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
செயல்படும்போது இன்னும் போதும்போதாமைகள் தெரியவரலாம்.அவ்வப்போது நகைச்சுவை அவசியம் தான் என்றாலும் பின்னூட்டம் குறிப்பிட்ட கருத்தை விட்டு அதிகம் விலகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்போதுதான் நமது நோக்கம் சரியான திசையில் பயணிக்கும். மடலாடற்குழுக்களில் அவ்வப்போது இந்தத் திசைமாற்றம் நிகழ்வதாலேயே இந்த முன்னெச்சரிக்கைக் குறிப்பு.
நிச்சயமாக யூனிகோட் பயன்பாட்டில் தான் இது அமைகிறது. இயங்கு எழுத்துரு குறித்த ஆலோசனைகள் வேண்டும்.
ராசு, மாலன், அன்புவிற்கும் நன்றி
அடுத்த பதிவில் அரங்கை ஆரம்பிப்போம். அதுவரை இன்னும் ஆலோசனைகள் தரலாம்.மேலும் ஆர்வமுள்ள நண்பர்கள் வரலாம்.

0 comments: