பதிவரங்கம்

இது ஒரு மாறுபட்ட வலைமுயற்சி. வலைப்பதிவின் தளமும் மடலாடற்குழுக்களின் விரிவும் உள்ளடக்கிய பதிவு அரங்கம் ஒன்றை உருவாக்குவது என்ற நோக்கத்தில் இதை வெளியிடுகிறேன். இங்கு ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது தலைப்பு அல்லது கேள்வி மட்டும் பதியப்படும். அதையொட்டிய பதிவுகளை, விவாதங்களை, விளக்கங்களை நீங்கள் இடுங்களேன். ஏற்கனவே எல்லோரும் செய்து கொண்டிருப்பதுதான். ஆனால் விரிவு மேலேயும் விமர்சனம் கீழேயும் வருவதை மாற்றி விரிவை விமர்சனப்பகுதியில் விளக்கமாகவும் பலரது கருத்துக்களின் கதம்பமாகவும் ஆக்கலாமென்று எண்ணம். இதில் பங்கேற்க ஆர்வமுள்ள நண்பர்கள் ஒப்புதலைக் கீழே பதியுங்களேன். போதுமான ஆதரவு இருந்தால் தொடர்வோம். உற்சாகமாக வாருங்கள். உற்சாகப் படுத்துங்கள்.....

7 comments:

  1. ரா.சு says

    சுவரசியமாக இருக்கிறது உங்கள் எண்ணம். பங்கேற்க ஆவலாக உள்ளேன்.


    Unknown says

    நான்கூட இந்தமாதிரி ஒன்றைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அதாவது ஆளாளுக்கு ஒரு விஷயத்தைப்பற்றி தனித்தனியாக தங்கள் வலைப்பதிவில் பேசாமல் பலர் ஒரே விஷயத்தைப்பற்றி இங்கு பேசலாம் அல்லவா? ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் கருத்துக்கள் கமெண்ட்களாக இடப்பட்டால் தமிழ்மணத்தில் ஒவ்வொரு புது கருத்தையும் பார்க்கமுடியாது. தமிழ்மணத்தில் தோன்றவில்லையென்றால் எத்தனைமுறை இங்குவந்து பார்ப்பது? ஒன்று செய்யலாம். ஒரு விஷயத்தைப்பற்றி நல்ல விரிவான கருத்து இடப்படும்போது அதை நீங்கள் தனி இடுகையாக (New post) இன்னொருமுறை வெளியிடலாம். இது தமிழ்மணத்தில் தோன்றி மேலும் கருத்துக்களை வரவேற்க ஏதுவாகும்.


    மாலன் says

    வலைப்பூக்களின் சாத்தியங்களை விரிவாக்க முயற்சிக்கும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். இதை மடலாடற்குழுக்களிலிருந்து எப்படி வேறுபடுத்தப் போகிறீர்கள் என்பதைக் காண ஆவலாய் இருக்கிறேன். வாழ்த்துக்கள்
    மாலன்


    அன்பு says

    அனுராக்,

    உங்கள் புதியமுயற்சிக்கு பாராட்டுதலும், வாழ்த்துக்களும். கண்டிப்பாக கலந்துகொள்கிறேன். குறைந்தபட்சம் யுனிக்கோடில் மடலாடல் குழுவமைப்போம்.


    மீனாக்ஸ் | Meenaks says

    நல்லதொரு முயற்சி. உங்கள் எண்ணம் நிறைவேற கமெண்ட் அளிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் ப்ளாக்கருக்குள் லாகின் செய்து கமெண்ட் செய்வது தொல்லை. பத்ரியின் எண்ணங்கள் பதிவின் (அல்லது அதை அடிப்படையாகக் கொண்ட எங்கள் மேல்Kind பதிவின்) source-ஐப் பார்த்து நீங்கள் இதைச் செய்யலாம். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள்.


    Badri Seshadri says

    Blogspot/Blogger இல் பின்னூட்டங்களுக்கு செய்தியோடை வசதியை - இப்பொழுதைக்கு - கொடுக்க முடியாது. ஆனால் மூவபிள் டைப், நியூக்ளியஸ் போன்றவை வழியாக வலைப்பதிவை உருவாக்கினால் இதைச் செய்ய முடியும்.

    ஏன்? ஹாலோஸ்கேன் வழியாக பின்னூட்டங்கள் கொடுப்பதில் கூட பின்னூட்டங்களுக்கான செய்தியோடையை உருவாக்க முடியும். (ஆனால் அதிகம் பின்னூட்டம் விட முடியாது)

    நீங்கள் yarl.net சுரதாவிடம் பேசிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.


    Thangamani says

    நல்ல முயற்சி.