வேட்டை

இந்தப் பதிவுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கக்கூடாது.

கேட்டால்?

சுட்டுவிடுவேன். (படத்தைத்தான்)

Image hosted by TinyPic.com


தமிழ்ப்பதிவுகள்

32 comments:

  1. Anonymous says

    Yov punnaakku,

    Ithu kaasi enbavarin thanippatta website. Umakku irukka viruppamillai enraal idaththai kaali seidhuvittu sellum.

    Unda veettukku rendagam panna Vendaam.


    குழலி / Kuzhali says

    நேரக்கொடுமை.....


    dondu(#11168674346665545885) says

    நீங்கள் யார் ஐயா காசியை அவருடைய சொந்த வீட்டிலிருந்து விலக்குவது? உங்களை இங்கு இருக்குமாறு யாரும் கையை பிடித்து கெஞ்சவில்லையே. பிட்க்கவில்லையென்றால் இடத்தைக் காலி செய்யலாமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்


    enRenRum-anbudan.BALA says

    AnurAg,

    I think this exercise of yours is totally unwarranted :-(


    enRenRum-anbudan.BALA says

    en karuththukkaL at :
    http://balaji_ammu.blogspot.com/2005/10/blog-post_22.html


    மு. சுந்தரமூர்த்தி says

    அனுராக்,
    உங்களின் முந்தைய பதிவில் எழுதிய பின்னூட்டத்தில் நானும் பயன்படுத்தியிருந்த "சர்வாதிகாரத் தன்மை" என்ற சொற்றொடரும் உங்களை இந்த வாக்கெடுப்பு நடத்தத் தூண்டியதென்றால் அதற்காக காசியிடம் மன்னிப்பு கோருகிறேன்.

    இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு சிலர் வாக்களித்திருக்கிறார்கள். காசிக்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு நீங்கள் இதைச் செய்திருப்பதாகத் தெரிந்தாலும் கூட இதிலுள்ள முட்டாள்தனத்தை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.


    vv says

    அறிவிப்பு

    வாக்கெடுப்புப் பகுதியில் உள்ள sparklit comment பகுதியில் மறுமொழி இடுவதை தவிர்க்கவும். உங்கள் மறுமொழிகளை இங்கேயே இடவும் (blogger comments!)


    தருமி says

    as enRenRum-anbudan.BALA said this exercise of yours is not only totally unwarranted but also very uncouth.

    you cannot downgrade yourself further


    முகமூடி says

    என்ன ஆச்சு உங்களுக்கு?

    இதற்கு நான் ஓட்டு போடவில்லை. இந்த பதிவு தேவையா இல்லையா என்று கருத்து கணிப்பு நடத்தினால் ஓட்டு போடலாம் என்று இருக்கிறேன் ;-))


    பத்மா அர்விந்த் says

    அனுராக்
    இந்த வாக்கெடுப்பை நிங்கள் நடத்துவது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. பல்ருக்கும் சிந்திக்க வாய்ப்பு தந்ததற்கு!!!


    ஜென்ராம் says

    நீக்க வேண்டாம் என்று வாக்களித்திருக்கிறேன். அது அவரது உழைப்பு. அவரது சொத்து. இது போன்ற வாக்கெடுப்பே - அவரது அனுமதியுடன் நடந்தாலும் கூட- அராஜகம் என்பது என் கருத்து.

    அரசியலில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று அரசியல் தலைவர் மலிவான ஸ்டண்ட் அடிப்பாரே அது போன்ற தோற்றத்தை இந்த வாக்கெடுப்பு ஏற்படுத்திவிடப் போகிறது. இது காசிக்கு செய்யும் உதவி அல்ல.

    உங்கள் வீட்டிற்குள் என்னால் உங்கள் அனுமதியின்றி வர இயலாது. உள்ளே நீங்கள் அனுமதித்தீர்கள் என்பதற்காக நான் அங்கேயே இருந்து உங்கள் வீட்டில் இருக்கும் பிறருக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க இயலாது. இந்த சாதாரண உண்மை இரு தரப்பிலும் சில கஷ்டமான சொற்களுக்குப் பின் என் போன்றவர்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.

    அந்த சொற்கள் ஏற்படுத்தும் வேதனை போதாதென்று நீங்கள் வாக்கெடுப்பு வேறு நடத்துகிறீர்கள்.

    நமது தேர்தல்களில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் வாக்களிக்கும் கோடிக்கணக்கான பாமரர்களைப் போல நானும் இந்த வாக்கெடுப்பில் பங்கெடுத்திருக்கிறேன்.


    -/பெயரிலி. says

    புத்திசாலித்தனமாகச் செயற்படுகிறேனென்ற நினைப்பிலே நான் நிறைய முட்டாட்டனமான பதிவுகளைப் போட்டிருக்கின்றேன். ஆனால், இந்தப்பதிவினை மிஞ்ச எந்நாளிலுமே என்னால் இயலாது. புளொக்கரிலே இருக்கும் சிக்கல் பிக்கலுக்கே தமிழ்மணத்தின் சிண்டைப் பிடித்தாட்டும் தமிழ்ப்பதிவாளர்களிடையே இது மதுரைக்கு வந்த சோதனை.


    Anonymous says

    என்னாச்சு அனுராக்?

    -suratha-


    வானம்பாடி says

    அனுராக், என்ன இது? இது ஏதாவது விளையாட்டென்றால் இது ரசிக்கும்படி இல்லை. உண்மையிலேயே நீங்கள் இப்படி கேட்கிறீர்களானால,் குழலி சொல்லியிருப்பது 'எல்லாம் நேரக்கொடுமை'.


    வசந்தன்(Vasanthan) says

    காசியை எதிர்ப்பவர்களை நக்கலடித்து எழுதப்பட்டதுதான் இப்படிப் பொருள் மாறிவிட்டதென்று நினைக்கிறேன்.
    இப்பிரச்சினை பற்றிய உங்களது முந்தைய பதிவை வைத்து இன்னும் உறுதியாக நம்புகிறேன்.
    ஆனால் இது கோமாளித்தனமாது. உங்களுக்கு யார் தேர்தல் ஆணையாளர் பதவி தந்தது?


    வசந்தன்(Vasanthan) says

    ஆனால் இடையில் ஓரிடத்தில் நீங்களே வந்து பின்னூட்டமிட்டுச் சென்றிருக்கிறீர்களே. அப்போதாவது தெளிவுபடுத்தியிருக்கலாமே


    vv says

    நிச்சயமாக இந்தப் பதிவு விளையாட்டுத் தனமாகப் போடப் பட்டதல்ல. ஆனால் அதன் உண்மையான காரணத்தை உணர்ந்தவாறு ஒரே ஒருவர் மட்டுமே மறுமொழி இட்டிருக்கிறார்.


    Anonymous says

    ஓண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய ஓட்டிய கதைதான்


    ஜோ/Joe says

    எல்லாம் காலத்தின் கோலம்.
    நல்ல காரியம் செய்பவர்களை ஊக்கப்படுத்தா விட்டாலும் குறைந்தபட்சம் புண்படுத்தாமலாவது இருக்கலாம்.


    Vaa.Manikandan says

    நம்ம ஆளுகளுக்கு எப்பவும் ஒரு கடிவாளம் வேணும்.
    so I support Kasi.

    ஆனா எனக்கு எப்போ ஆப்பு வைக்க போறாருனு தெரியலை!


    தாணு says

    நல்ல முயற்சி.பத்மா சொல்லியிருப்பது போல் ஒரு பரீட்சார்த்தமாக நாடி பிடித்துப் பார்க்கிறீர்கள். சைக்காலஜியில் இதற்கு ஒரு பொருத்தமான பெயர் உண்டு, reinforcement, என்று நினைக்கிறேன். சரிதானா பத்மா?


    மு. சுந்தரமூர்த்தி says

    //இந்த வாக்கெடுப்பை நிங்கள் நடத்துவது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. பல்ருக்கும் சிந்திக்க வாய்ப்பு தந்ததற்கு//

    பத்மா,
    காசிக்கு எவ்வளவு பேர் ஆதரவு தருகிறார்கள் என்பதைக் காட்டும் உயரிய நோக்கம் இருக்கலாம். ஆனால் இந்த உத்தி ராம்கி குறிப்பிட்டதைப் போல ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதியின் ஸ்டண்ட் போன்றது. இது காசிக்கோ அல்லது இதை நடத்தும் அனுராகுக்கோ எந்த விதத்திலும் பெருமை சேர்ப்பதாக இல்லை. இந்த காரணத்திற்காக நான் இதில் வாக்களிக்கவில்லை. வாக்களித்தது இந்த பதிவுக்கு மட்டுமே ('-' வாக்கு).


    vv says

    தமிழ் வலைப் பதிவர்கள் எல்லாம் சிந்திக்கத் தெரிந்தவர்கள். பொறுப்புணர்ச்சி மிக்கவர்கள். பெரும் கல்வியாளர்களும் நல்ல பதவிகளிலும் உயர்ந்த பொறுப்புகளிலும் இருப்பவர்களும் நிறைந்த சபை இது. இவர்களின் பதிவுகள் கருத்துள்ளவையாக இருக்கும். சிந்திக்க வைக்கும் என்ற பார்வையில் தான் தமிழ்மணத்தின் வழியாக தமிழ்வலைப்பதிவுகளை நான் பார்த்து வந்திருக்கிறேன்.

    இதற்கு மாறாக சில பதிவுகள் அவ்வப்போது தலைகாட்டத் துவங்கி ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு பதினாறாகி.... தமிழ்மணத்தையே ஆக்கிரமித்துக்கொள்ளும் அளவில் சில மோசமான பதிவுகள் வரத்துவங்கிய போது இந்தக்குதிரைக்கு கடிவாளமிட்டாக வேண்டுமே என்ற கவலை எனக்குள் எழுந்தது. அந்தக்கவலை என்னைப்போலவே இன்னும் பலருக்கும் வரத்துவங்கி அவை தமிழ்மணத்தின் நிர்வாகிகளின் பார்வைக்குப்போய், இறுதியாக காசி அந்த முடிவை எடுத்தார்.

    ஏனோ தெரியவில்லை பாதிக்கப்பட்டவர்களைக்காட்டிலும் அதிக வேகத்துடன் மற்று சிலர் தமிழ்மணத்துக்கும் காசிக்கும் எதிராக கணைகளை எறியத்துவங்கி அவை தனிமனித வசைகள் என்ற அளவுக்கு வரத்துவங்கின. இது தொடர்பாக தமிழ்மணத்தின் நியாயங்களை பதிவுகளிலும் பின்னூட்டஙகளிலும் நானும் சில தினங்களாக பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். என்ற போதும் சிலரது பதிவுகளும் மறுமொழிகளும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல ஒரு குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்தி வந்தன. அதன் முக்கிய சாரம் காசியின் நடவடிக்கை சர்வாதிகாரமானது என்பதாகும்.

    தமிழ்மணத்தின் மீதான காசியின் அதிகாரங்களையே கேள்வி கேட்கும் விதமாகவும் சிலர் எழுதினார்கள். நிர்வாகம் அல்லது நிர்வாகியின் அடிப்படை உரிமையை கேலிபேசுவதாகவும் அவர்களின் பதிவுகள் இருந்தன. இதற்கெல்லாம் மேலாக எந்த நியாயத்தையும் காது கொடுத்துக் கேட்பவர்களாகவும் அவர்கள் இல்லை.

    எனவே இவர்களெல்லாருமே சிந்தித்துப் பேசுகிறவர்கள் தானா? அல்லது கேட்பார் பேச்சுக்கு கைத்தாளம் போடுகிறார்களா என்பதை அறிய முடிவு செய்தேன். ஜனநாயகம் வாக்கெடுப்பு போன்ற சொற்களும் சில நண்பர்களால் பயன்படுத்தப் பட்டிருந்ததும், ஒரு நண்பர் வாக்கெடுப்பையே நடத்தி அறிவித்ததும் அடுத்த கட்டமாக காசிக்கு எதிராக இது போன்றதொரு வாக்கெடுப்பு நடைபெறும் சூழலை உணர முடிந்ததாலும் அதிரடியாக இந்த வாக்கெடுப்பை அறிவித்தேன்.

    இந்த நிமிடம் வரை பதிவான 41 வாக்குகளில் தமிழ்மணம் நிர்வாகப் பொறுப்பிலிருந்து காசியை நீக்க வேண்டும்...! என்று வாக்களித்த 14 பேர் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. காசியை நிஜ சர்வாதிகாரியாக நினைத்து வாக்களித்துள்ள இவர்கள் தமிழ்மணம் என்றால் என்பதை அறிந்து வைத்துள்ளவர்கள் தானா? "தமிழ்மணத்திலிருந்து காசியை நீக்கிவிடலாமா?" என்று கேட்பவரின் மனநலம் பற்றிக்கூட கேள்வி எழுப்பாத இந்த அப்பாவிகளுக்கு காசியின் மீது என்ன பகை? இவர்கள் எல்லாம் வலைப்பதிவில் எழுதுபவர்களாக இருந்தால் என்ன பொறுப்புணர்ச்சியுடன் எழுதுவார்கள்? என்பதையெல்லாம் பார்வையாளர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

    //இதையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு சிலர் வாக்களித்திருக்கிறார்கள்.// சுந்தரமூர்த்தியின் இந்த மறுமொழிக்குப்பின் வாக்குப்பதிவு சற்று மந்தமாகி இருக்கிறது. இல்லாத பட்சம் இன்னும் நிறைய பார்த்திருக்கலாம்.

    மதிப்புக்குரிய பத்மநாப அய்யர், டோண்டு, என்றென்றும் அன்புடன் பாலா, சுந்தரமூர்த்தி, தருமி, சுரதா, சுதர்சன், வசந்தன், ஜோ, ராம்கி, ஆகியோரின் சொற்களில் காசியை நான் அவமரியாதை செய்கிறேனோ என்ற வருத்தம் தெரிகிறது.

    குழலி, முகமூடி ஆகியோர் இந்தப் பதிவை எதிர்க்கிறார்களென்று புரிகிறது. பெயரிலி என் நோக்கத்தை ஓரளவு புரிந்து கொண்டிருந்தாலும் அவரது வழக்கமான பாணியில் குழப்பிவிட்டுவிட்டார்.
    பத்மா தெளிவாக என் நோக்கத்தை வெளிப்படுத்திவிட்டார். தாணு அதை விளக்கியிருக்கிறார்.

    கடந்த சில தினங்களின் என் பதிவுகளைப் படித்திருந்தவர்களுக்கு குழப்பம் வர பொதுவாக காரணமில்லை. ஆனால் இந்த வாக்கெடுப்பின் முகப்பு வாசகங்களும் சர்வாதிகாரி என்ற பதமும் பல நண்பர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது.

    எனது நோக்கமே எந்தவித மனமுதிர்ச்சியும், குறிக்கோளும், சுயபரிசோதனையும் இல்லாத பலர், எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற மனநிலை கொண்டவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதுதான்.

    சுந்தரமூர்த்தி, ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் போன்றவர்கள் உண்மையான அக்கறையுடன் தங்கள் கருத்துக்களை முன்வைத்தாலும், அவை மற்றவர்களுக்கு காசிக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப் பட்டதை உணர்ந்திருப்பீர்கள்.

    //வலைப்பதிவிற்கு புதிதாக வருபவர்கள் படிக்க நேர்ந்தால், காசியினை பற்றி தவறான பிம்பம் அவர்கள் மனதில் உருவாவதற்கு வாய்ப்பிருப்பதனால், இந்த பதிவை நீக்குவதற்கு என் வேண்டுகோள்.// என்ற பாண்டியின் கருத்துடன் உடன்படுகிறேன்.

    அனைவருக்கும் நன்றி.


    Anonymous says

    Sundaramurthi
    I though tthis more of a reverse psychology and giving a person a chance to think in his own angle. So this should be tried in an environment both the practioner and the person think. Here I was afraid some may vote without thinking, but some who has not expressed their voice came out. Thanks
    Padma


    enRenRum-anbudan.BALA says

    அனுராக்,

    தங்கள் விளக்கத்திற்கு நன்றி !

    நீங்கள் எதிர்மறை வகையில் சிலவற்றை சிலருக்கு உணர்த்த
    எண்ணியிருந்தாலும், இந்த வாக்கெடுப்பு, இந்த சூழலில் தேவையற்றது என்பது என் கருத்து, இப்போதும்!!! அதனால், நான் இந்த
    வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை :-(

    தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டவர்களோ, தணிக்கையை எதிர்ப்பவர்களோ, தமிழ்மணம் காசியின் பெரும் உழைப்பில்
    உருவானதையும், சில மாற்றங்களை எடுத்து வர அவருக்கு உரிமை உள்ளது என்பதையும் மறுக்கும் அளவுக்கு சிந்திக்கத் தெரியாதவர்கள்
    அல்லர் !!! இப்படிக் கூறுவதால், நான் எதிர்க்கட்சியின் 'உபதலைவர்'
    என்று கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன் :)

    விலக்கப்பட்ட ஆதங்கத்தில் எதிர்க் குரல்கள் எழுந்ததும், செல்வராஜ் கூறியது போல் "ஆற்றுப்பாலத்தில் கீழ் நிறைய நீர் ஓடி விட்டதும்"
    உண்மையே! அதே வகையில், எதிர்த்தவர்களில் சிலர் காசியை குறித்துப் பேசியவை பெரும்பான்மையானவருக்கு ஏற்புடையவை அல்ல.
    நீக்கியது குறித்து, காசியிடம் தனிப்பட்ட முறையில், காரணங்களைக் கேட்டறிவதற்கு சம்மந்தப்பட்டவருக்கு உரிமை உண்டு. பொதுவில்
    கண்டனம் தெரிவிக்கவும், அவரை வசை பாடவும் எந்தவொரு உரிமையும், காரணமும் கிடையாது. அதுவும், "பினாயில்" உவமை
    போன்றவை too much, அல்ல, THREE MUCH என்பது என்
    அபிப்பிராயம்.

    மேலும், ஒரு வேளை என் பதிவு நீக்கப்பட்டிருந்தால், காசியிடம் தனிப்பட்ட முறையில், அதற்கான காரணத்தை கேட்டறிந்து, என்னளவில் தேவையான நடவடிக்கைகள் எடுத்து, தமிழ்மணத்தில் என் பதிவுகள் தொடர்ந்து சேகரிக்கப்படுவதற்கு முயற்சிகள் செய்திருப்பேன்!!!

    என்றென்றும் அன்புடன்
    பாலா


    தருமி says

    பலரும் பார்த்தாகி விட்டது; நீங்களும் உங்கள் கருத்தை வெளிக்காட்டியாகிவிட்டது. பதிவின் பலன் முடிந்துவிட்டது. உங்களின் பின்னூட்டத்தை வேறொரு புதுப் பதிவாக்கி, இப்பதிவை -பலரின் கருத்தை மதித்து - நீக்கிவிடுவதைப்பற்றி யோசியுங்கள்.


    ஜென்ராம் says

    //மதிப்புக்குரிய பத்மநாப அய்யர், டோண்டு, என்றென்றும் அன்புடன் பாலா, சுந்தரமூர்த்தி, தருமி, சுரதா, சுதர்சன், வசந்தன், ஜோ, ராம்கி, ஆகியோரின் சொற்களில் காசியை நான் அவமரியாதை செய்கிறேனோ என்ற வருத்தம் தெரிகிறது.//

    வைகோ கட்சியை விட்டு நீக்கப்பட்டதை எதிர்த்து சில இளைஞர்கள் தீக்குளித்தனர். உடனே திமுக தலைவர் கருணாநிதி அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். நிச்சயம் அப்படி நடக்காது என்பது பலருக்குத் தெரிந்த போதிலும் சிலர் "தலைவா மறு பரிசீலனை செய்" என்று தீக்குளித்தனர். ஒரு போக்கைத் திசைதிருப்ப சிலர் செய்யும் மலிவான உத்தியை இங்கும் பயன்படுத்தியது சரியல்ல என்பதே என் கருத்து. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கும் சிலரைச் சரி செய்வதற்காக நிதானமாக யோசிக்கும் சிலரின் பார்வையில் இருந்து சரிந்துவிடும் ஆபத்து கொண்ட வழிமுறை இது. சுந்தரமூர்த்தியும் இதே கருத்தைக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.
    சரி, அதெல்லாம் இப்போது அவ்வளவு முக்கியம் இல்லை.

    "முக்கியம்" என்ற சொல்லைக் கூட தட்டச்ச முடியவில்லை. காரணம் புரிந்து கொள்ளுங்கள். இருந்தாலும்....?


    vv says

    //மேலும், ஒரு வேளை என் பதிவு நீக்கப்பட்டிருந்தால், காசியிடம் தனிப்பட்ட முறையில், அதற்கான காரணத்தை கேட்டறிந்து, என்னளவில் தேவையான நடவடிக்கைகள் எடுத்து, தமிழ்மணத்தில் என் பதிவுகள் தொடர்ந்து சேகரிக்கப்படுவதற்கு முயற்சிகள் செய்திருப்பேன்!!!//

    இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். இத்தகைய சுய பரிசீலனைக்கு பலரும் தயாராக இல்லை என்பதே இங்குள்ள தலையாய பிரச்சினை.

    dharumi அவர்களே இது நான் முன்னரே எடுத்திருந்த முடிவு தான். இன்றிரவு தேவையான மாற்றங்களைச் செயவேன்.


    vv says

    ராம்கி உங்கள் ஒப்பீடு இங்கே சரியானதாக இல்லையே.

    என்னைப் பொறுத்தவரை //நிதானமாக யோசிக்கும் சிலரின் பார்வையில் இருந்து சரிந்துவிடும் ஆபத்து கொண்ட வழிமுறை இது.// என்பதை மனதில் இருத்தியே இதற்குத் துணிந்தேன். அவர்கள் அதே நிதானத்தோடு என்னைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடும்!


    vv says

    Bala look at that...


    ஜோ/Joe says

    ராம்கி,
    ரொம்ப சரியா சொன்னீங்க.


    வலைஞன் says

    நேற்றிரவு முதல் என் கணிப்பொறிக்கு காய்ச்சல். (இது ஏதோ ஒரு பெரிய நோயின் அறிகுறியாக இருக்கக் கூடும் என்பதனால் சில நாட்கள் என் வருகை தடைப்பட வாய்ப்பிருக்கிறது.)

    இப்போது தான் பதிவின் மாற்றத்தை செயல்படுத்த முடிந்தது. இத்தனைக்குப் பிறகும் மேலும் 14 நண்பர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள் 41+14=55 இவர்களின் வெவரம் குறித்து (நாட்டுப்புற வழக்கில் வெவரம் என்றால் அறிவு. உதா. வெவரமில்லாதவன்!) எல்லோரும் சந்தோசப்படுவோம்.

    என் கணிப்பொறியில் வின்டோஸ் திறக்க சிரமப்பட்டது. சிரமப்பட்டு திறந்தால் system clock 1643 ஆம் ஆண்டைக் காட்டுகிறது. நேரமும் தவறாக இருந்தது. இது என்ன நோய் என்பதை தெரிந்தவர்கள் சொல்லலாம்.